சட்டவிரோத பறவைகளுடன் 2 சந்தேக நபர்களை அதிரடியாக கைது செய்த கடற்படை!

Editor
0
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 91 பறவைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் 2 சந்தேக நபர்களையும் கடற்படை கைது செய்துள்ளது.

மன்னார், பேசாலை, சிரிதோப்பு கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைப்பற்றப்பட்ட படகில் இருந்து 72 புறாக்களையும் 19 சேவல்களையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 17 மற்றும் 52 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் பேசாலை மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களுடன் டிங்கி படகு மற்றும் பறவைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top