பல் வலிக்காக வைத்தியசாலை சென்ற 24 வயது பெண் மரணம் ; சந்தேகத்தை வெளியிட்ட கணவர்

Editor
0

மொனராகலை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதென கணவர் தெரிவித்துள்ளார்.

மொனராகலை சிரி விஜயபுரத்தைச் சேர்ந்த பி. ஷியாமலி மதுஷானி என்ற 24 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒரு குழந்தையின் தாயான தனது மனைவியின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு கணவர் நுவன் லக்மின மருத்துவமனை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்வலிக்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் தனது கணவருடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததால், மருத்துவமனையின் ஆறாவது வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

தனது மனைவியின் மரணத்திற்கான காரணத்தை தெளிவுபடுத்துமாறு கணவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top