260 பேரின் உயிரை பறித்த ஏர் இந்தியா விமான விபத்து; வழக்கு தொடர்ந்த உறவுகள்!

Editor
0

 கடந்த ஜூன் மாதம் இந்தியா அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்த நான்கு பயணிகளின் குடும்பத்தினர், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் மற்றும் விமான பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான ஹனிவெல் மீது அமெரிக்காவில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.


செவ்வாய்க்கிழமை(16)  தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தவறான எரிபொருள் சுவிட்சுகள் விபத்துக்குக் காரணம் என குறிபிட்டிருந்த அவர்கள் , விமானத்தின் வடிவமைப்பின் அபாயங்கள் குறித்து அறிந்திருந்தும் நிறுவனங்கள் “எதுவும் செய்யவில்லை” என்றும் குற்றம் சாட்டியது.



நிறுவனங்கள் எதுவும் செய்யவில்லை 

எனினும் அமெரிக்க விமான உற்பத்தியாளர் இந்த வழக்கு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக அது இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை சுட்டிக்காட்டியது.


லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா போயிங் 787 ரக விமானம், அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 260 பேர் உயிரிழந்தனர்.


விமானம் தரையிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களுக்குப் பின்னர் என்ஜின்களுக்கான எரிபொருள் துண்டிக்கப்பட்டதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top