எல்ல பேருந்து சாரதியின் இரத்த பரிசோதனை! பொலிஸார் வெளியிட்ட தகவல்

Editor
0

 எல்ல பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்து ஓட்டுனரின் இரத்த மாதிரிகள், பரிசோதனைக்காக அரசு பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இதன்படி, குறித்த இரத்த மாதிரிகள் இன்றையதினம்(07.09.2025) மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட உள்ளது.


விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர், போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தாரா என்பதை கண்டுபிடிப்பதற்காகவே இந்த இரத்தப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.


நாட்டை உலுக்கிய விபத்து


இராவண எல்ல வனப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை(04) ஆயிரம் அடி பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்தில் இருந்த 34 பேரில்15 பேர் உயிரிழந்திருந்தனர்.



மேலும், 18 பேர் காயமடைந்ததாகவும் ஒரு பயணி காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற குறித்த தனியார் சுற்றுலாப் பேருந்து, நுவரெலியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​ஒரு சொகுசு காரில் மோதி பள்ளத்தில் விழுந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top