யாழில் கடும் மழை ; சரிந்தது வரலாற்று பொக்கிசம்

Editor
0

யாழ்ப்பாணத்தில்  இன்றைய தினம் பெய்த மழை காரணமாக வரலாற்ரு சிறப்புவாய்ந்த  தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

இடிந்து விழுந்து கட்டடம்

அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்டது.


அதனை அடுத்து அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அதேவேளை மந்திரி மனையை புனரமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வந்தன

இந்நிலையிலையே இன்றைய தினம் புதன்கிழமை மந்திரிமனையின் ஒரு பாகம் இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாண இராசதானி காலத்திற்குரியதாக கருதப்படும் மந்திரி மனை, பாதுகாக்கப்பட வேண்டிய தொல்பொருள் சின்னமாக 2011 ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  யாழ்ப்பாணத்தின் வரலாற்று ப்க்கிசங்களில் ஒன்றாக திகழ்ந்த  மந்திரிமனை இடிந்துள்ளமை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top