நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் பிறந்து நான்கு நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனை
பிறந்து நான்கு நாட்களின் பின்னர் குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்து 4 நாட்களில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
