யாழ் குப்பிளானில் பலத்த காற்றால் வீட்டின் மீது விழுந்த பனை மரம்!

Editor
0

 யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (25) வீசிய பலத்த காற்று காரணமாக பனை மரம் ஒன்று வீட்டுக்கு மேல் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளது.


இதன்போது , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரும் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.




குப்பிளான் ஜே/211 கிராம சேவகர் பிரிவில் உள்ள வீடொன்றின் முன்பாக நின்ற பனை மரம் , கடும் காற்று காரணமாக முறிந்து விழுந்ததில் வீடும் காரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.


இத்தகவலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.   



   





கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top