கிளிநொச்சியில் ஜனாதிபதி அநுர.

Editor
0

 கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னந் தோட்டத்தை, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை (02) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.



வடக்கு தென்னை முக்கோண வலயத்தின் மேம்பாட்டுக்காக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சிலாபம் பெருந்தோட்ட நிறுவனம் ஆகியன இணைந்து இதனை நிறுவியுள்ளன.



சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இது திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனும் கலந்துகொண்டார்.

அதோடு நிகழ்வில் துறைசார் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, கடற்றொலில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீபவானந்தராசா, க.இளங்குமரன் ஆகியோரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.  






கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top