எம்.பி அர்ச்சுனாவின் கோரிக்கை ; நாடாளுமன்ற முழுவதும் சிரிப்பு!

Editor
0

 நாடாளுன்றத்தில் நடைபெற்ற அமர்வில் எம்.பி ராமணாதன் அர்ச்சுணாவின் கருத்தை கேட்டு  சபாநாயகர் உள்ளிட்ட சபையில் இருந்தவர்கள் சத்தமாக சிரித்துள்ளனர்.


நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலில் உள்ள பொது கழிப்பறையை மாலை 04.30மணிக்கு பிறகு மூட வேண்டாம். இரவில் பூட்டு போட வேண்டாம் என்று குறிப்பிடுங்களென யாழ்.மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.


நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற அமர்வில் ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து உரையாற்றிய அர்ச்சுனா, நிலையியல் கட்டளை 141 பிரகாரம் இதனை குறிப்பிடுகிறேன்.




நாடாளுமன்றத்தின் பிரதான வாயிலில் உள்ள பொது கழிப்பறை மாலை 04.30மணிக்கு மூடப்படுவதாகவும், அதனால் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகிறார்கள்.


ஆகவே அந்த பொது கழிப்பறையை மூட வேண்டாம், இரவில் பூட்டு போட வேண்டாம் என்று குறிப்பிடுங்கள் என்றார்.


அர்ச்சுனாவின் இந்த கருத்தை கேட்டு சபையில் இருந்தவர்கள் அனைவரும் சத்தமாக சிரித்தார்கள். சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, அதற்கு ஏதும் பதிலளிக்காமல் சிரித்தவாறு சபை நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top