2010 முதல் 2012 வரை அமைச்சராகப் பணியாற்றியபோது சட்டவிரோதமாக சொத்துக்களைச் சேர்த்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல்செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்படி இன்று(24.09.2025) கொழும்பு மேல் நீதிமன்றம் சட்டவிரோதமாக சொத்துக்களைச் சேர்த்ததமை தொடர்பிலான வழக்கை விசாரிக்க அனுமதியளித்துள்ளது.
சட்டப்பூர்வ வருமானம்
அதன்படி, சட்டவிரோதமாக சொத்துக்கள் மற்றும் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 17 முதல் ஆரம்பமாகும் என்று கொழும்பு ஆமல் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹால் உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சராகச் செயல்பட்டு, தனது சட்டப்பூர்வ வருமானத்தை விட கிட்டத்தட்ட 150 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்ததன் மூலம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

