கரூரில் நடந்த விஜய் பிரசார கூட்டத்தில் பலர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பிரபலங்கள் பலரும் அறிக்கை வெளியிட்டனர். அதில் நடிகை ஓவியா வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓவியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் விஜய்யை கைது செய்ய வேண்டும் (அரெஸ்ட் விஜய் ) என்று பதிவிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஓவியாவின் இந்த பதிவுக்கு ஆதரவும் ,எதிர்ப்பும் கிளம்பின.
இதற்கிடையில் , தன்னை அவதூறாக பேசி வந்த பதிவுகளையும் `ஸ்கிரீன் ஷாட்` எடுத்து அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது இன்னும் சர்ச்சையானது.

