மியான்மரில் சைபர் குற்றத்திற்காக இலங்கையர்கள் ஆட்சேர்ப்பு!

Editor
0

மியன்மாரில் சைபர் குற்றங்களுக்காக மேலும் 17 இலங்கையர்கள் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படுவது தொடர்பில் வெளியுறவு அமைச்சகம் வெளிப்படுத்தியுள்ளது.


இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நபர்கள் சுற்றுலா விசாவில் வேலைக்காக மியன்மாருக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள பகுதி மியான்மரில் உள்ள தாய்லாந்து எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது என்றும், மற்றும் கூகுள் வரைபடத்தில் "சைபர் கிரைம் ஹாட் ஸ்பாட்" என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


பயங்கரவாதக் குழுவின் கட்டுப்பாடு

மியாவாடி நகரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தப் பகுதி, ஒரு பயங்கரவாதக் குழுவின் கட்டுப்பாட்டில் முழுமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.




முன்னதாக, அந்தப் பகுதியில் சைபர் கிரைமிற்காக அனுப்பப்பட்ட இலங்கையர்கள் குழு ஒன்று மிகுந்த முயற்சியால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கணினித் துறையில் வேலை பெறும் நோக்கில் இந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்றுள்ளனர் என்பது மேலும் தெரியவந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top