சமையல் எரிவாயு கசிவால் பெண் பலி; மட்டக்களப்பில் சம்பவம்!!

Editor
0

 மட்டக்களப்பில் சமையல் எரிவாயு கசிவு சம்பவத்தில் வாழைச்சேனை பெண் ஒருவர் புதன்கிழமை (10) மரணமடைந்துள்ளார்.


சம்பவத்தில் வாழைச்சேனை ஓட்டமாவடி -1 அரபா வீதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஏ.எம்.உம்மு ஹதீஜா என்பவரே மரணமடைந்துள்ளார்.


சமையல் எரிவாயு கசிவு


உயிரிழந்த பெண், கடந்த வியாழக்கிழமை(04) காலை தேநீர் தயாரிப்பதற்காக எரிவாயுவை பயன்படுத்தும் போது அதன் வயர் வெடித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது எரிகாயங்களுக்கான பெண் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top