வடக்கில் நிலவிய யுத்த சூழல் காரணமாக கைவிடப்பட்டிருந்த பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
கலாசார மற்றும் பௌத்த சாசன விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தங்காலையில் கைப்பற்றப்பட்ட ஐஸ் லொறி குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்கள்
பெருமளவானோருக்கு தொழில்வாய்ப்பு
மேலும் தெரிவிக்கையில் ஆப்ப சோடா (கோஸ்டிக் சோடா) மற்றும் க்ளோரின் உற்பத்தி தொழிற்சாலையாக பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்திய வள ஆய்வுகள் தற்போதைக்குப் பூர்த்தியடைந்துள்ள நிலையில் நாட்டின் நீர்வளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய முக்கியத்துவமிக்க பங்களிப்பை இத்தொழிற்சாலை வழங்கும்.
தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதன் ஊடாக நேரடியாக 150 பேர் அளவில் தொழில்வாய்ப்புகளைப் பெறுவார்கள்.
மறைமுகமாக சுமார் இரண்டாயிரம் பேர் வருமானம் பெறத் தொடங்குவர்.
பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் தனியார் மற்றும் அரசாங்க கூட்டிணைந்த வர்த்தகமாக மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)