ரகசா புயல் தாக்கும்போது, கடற்கரைப் பகுதிக்கு தமது பிள்ளையை அழைத்துச் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற இரண்டு தெற்காசியப் பெண்களை ஹொங்கொங் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்திய மற்றும் இலங்கை நாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட இந்தப் பெண்கள், புதன்கிழமை ஆப் லீ சாவ் கடற்கரையில் சிறுவனொருவனுடன் இருந்துள்ளனர்.
அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது, அலை அவர்கள் மூவரையும் இழுத்துச் சென்றது எனவும் எவருக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை எனவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
கடுமையான வானிலை
கடுமையான வானிலையின் போது, கடற்கரையிலிருந்து விலகி இருக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் பலமுறை கூறியுள்ளனர்.
இத்தகைய நேரங்களில் அலையுடன் விளையாடுவது பொதுமக்களுக்கும் மீட்புப் பணியாளர்களுக்கும் ஆபத்தானவை என்பதால் இத்தகைய அறிவுறுத்தல்களை விடுத்துள்ளனர்.
புயலின் போது, இந்தச் செயலுக்காக பொலிஸார் மக்களைக் கைது செய்தது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகிறது.
