இலட்சத்தில் லஞ்சம் கோரிய காவல்துறை உத்தியோகத்தர்: சுற்றிவளைத்த அதிகாரிகள்

Editor
0

பிணை பெற்று தருவதாக தெரிவித்து இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (11) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உத்தியோகத்தர்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்டம் காரைதீவு காவல் நிலையத்தில் பணியாற்றும் 32 வயது மதிக்கத்தக்க காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தன்னிடம் 10000 இலஞ்சம் கோரியதாக முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்டம் காரைதீவு காவல் நிலையத்தில் பணியாற்றும் 32 வயது மதிக்கத்தக்க காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் தன்னிடம் 10000 இலஞ்சம் கோரியதாக முறைப்பாடு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு
இதன்போது அங்கு மாறு வேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள், குறித்த காவல்துறை உத்தியோகத்தரை இலஞ்ச பணத்தை வாங்கும் போது கைது செய்துள்ளனர்.

வாகனசாரதி அனுமதிபத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்யாமல் அவற்றை மீள தருவதற்கு குறித்த காவல்துறை உத்தியோகத்தர் அந்த நபரிடமிருந்து ரூபா 10000 இலஞ்சம் கோரியிருந்ததாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்தோடு, கைதான சந்தேகநபரை இன்றைய தினம் (12) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top