மானிப்பாய் தவிசாளர் மீது கொதித்தெழுந்த பெண் உறுப்பினர்!

Editor
0

 யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையில் உறுப்பினர்கள் சத்தமிட்டு பேசுவதால் தங்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு சபையை நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான எட்வெட் மரியவாசினி தவிசாளரை கடிந்து கொண்டுள்ளார்.


மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


நாங்களும் எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளை சபைக்கு கொண்டுவந்தாலும் அதனை சபையில் முன்வைக்க முடிவதில்லை.


முன்னால் இருப்பவர்களே தொடர்ந்து எழுந்து கதைக்கின்றார்கள், பிரச்சினைப்படுகின்றார்கள். ஆகையால் சபையில் கதைப்பதற்கு எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.




எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு சபையை நடத்துங்கள்

ஒவ்வொரு விடயத்திற்கும் ஒவ்வொருத்தருக்கும் குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்கி வழங்குங்கள். இல்லாவிட்டால் எங்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீங்கள் சபையை நடத்துங்கள் என காட்டமாக கூறியுள்ளார்.


அதற்கு பதிலளித்த மானிப்பாய் தவிசாளர் ஜெசீதன்,


அனைவரும் கருத்துரைப்பதற்கு தான் இந்த சபை. இந்த சபையின் விதிகளை ஏற்று நடக்குமாறு நான் ஒவ்வொரு கூட்டத்திலும் அறிவுறுத்தி வருகிறேன். அதை கருத்தில் கொள்ளாமல் சில சந்தர்ப்பங்களில் உணர்ச்சி வசப்பட்டுத்தான் பிரச்சினைகளுக்குள் செல்கின்றார்கள்.


தயவுசெய்து அனைவரும் உணர்ச்சிவசப்படாமல் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என கருத்துரைகளை தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியதாக கூறப்படுகின்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top