மருதானை தொடருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் ஆரம்பம்!

Editor
0

 வரலாற்று சிறப்புமிக்க மருதானை தொடருந்து நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.


"கனவு இலக்கு" திட்டத்தின் கீழ் செப்டம்பர் 15 ஆம் திகதி, இந்த திட்டம் ஆரம்பாமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


 கொழும்பு மாவட்டத்தில் இரண்டாவது பெரிய தொடருந்து நிலையமான மருதானை நிலையம், நாட்டின் மிக முக்கியமான பாரம்பரிய நிலையங்களில்


புதுப்பித்தல் பணிகள்

முதன்முதலில் 1889 ஆம் ஆண்டு மர அமைப்பாக கட்டப்பட்டதுடன், 1893 ஜூலை 12 இல் ஒரு நிரந்தர கட்டிடம் திறக்கப்பட்டது.



அத்துடன் பிரிட்டிஷ் பாணியில் கட்டிடக் கலைஞர் சாலி மரியகர் வடிவமைத்த தற்போதைய நிலையம், 1908 நவம்பர் 9இல் திறக்கப்பட்டது.


இந்த நிலையில், புதிய புதுப்பித்தல் பணிகள், நிலையத்தின் வரலாற்றுத் தன்மைக்கு சேதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை மட்டுமே உள்ளடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top