இலங்கையின் நீதித்துறை டிஜிட்டல் மயமாக்கலை நோக்கிய ஒரு படியாக, வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை வங்கி அட்டைகள் மூலம் ஏற்றுக்கொள்ளும் வசதியை உயர் நீதிமன்றம் தொடங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள உயர்நீதிமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது.
தானியங்கி மயமாக்குவதற்கான
இது சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள், அட்டை பரிவர்த்தனைகள் மற்றும் நிகழ்நிலை மூலம் அபராதம், வழக்கு கட்டணம், முத்திரை வரி மற்றும் சான்றளிக்கப்பட்ட நகல்களுக்கான கட்டணங்கள் போன்ற கொடுப்பனவுகளை தீர்க்க உதவுகிறது.
இந்த நடவடிக்கை நீதிமன்ற அமைப்பில் பணம் செலுத்துவதை தானியங்கி மயமாக்குவதற்கான ஆரம்ப கட்டம் என்றும், இந்த வசதியை நீதவான் நீதிமன்றங்களிலிருந்து உயர் நீதிமன்றம் வரை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
