ராஜபக்சர்களின் பாணியில் தற்போது முன்னெடுக்கப்படும் சதி! அம்பலமாகும் ரகசியங்கள்

Editor
0

 ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது வருடாந்த மாநாட்டில் ராஜபக்ச தமைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து, அவதூறு பிரச்சாரம் மற்றும் அவமதிப்பு பிரச்சாரங்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


நீதித்துறை, நீதித்துறை சேவை ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றத்தில் லஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு எதிரான திட்டமிட்ட அவதூறு பிரசாரம் நாமல் ராஜபக்ஷவின் முழு ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவதூறு பிரச்சாரம்

சாகர காரியவசம் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த மூன்று வழக்கறிஞர்களால் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட அவதூறு பிரச்சாரம் பரப்பும் குழு தற்போது சஜித் பிரேமதாசவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய வங்கி பிணை முறி மோசடியை விசாரித்த கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க மீது தாக்குதல்களை நடத்தியவர்களில் பலர், தற்போது சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளனர்.

ராஜபக்ச தரப்பு

தற்போது நாடாளுமன்ற சலுகைகள் என்ற பெயரில் தணிக்கையாளர் நாயகம் மீதான தாக்குதலைப் போலவே, நீதித்துறை மற்றும் லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மீதும் ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதலை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்ய ராஜபக்ச தரப்பு திட்டமிட்டிருந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top