பெரிய வெங்காயத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்வதை விட இறக்குமதி செய்வதன் மூலம் நுகர்வோருக்கு குறைந்த விலையில் வெங்காயத்தைக் கொள்வனவு செய்ய முடியும் என்று அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வரி அறவீடு
அவர் மேலும் தெரிவிக்கையில், பெரிய வெங்காய உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளை பாதுகாப்பதற்காக தற்போதைக்கு ஒரு கிலோகிராம் இறக்குமதி வெங்காயத்துக்கு ஐம்பது ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பெரிய வெங்காயத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகமாகும். அதனை விட பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது செலவு குறைவானது.
குறைந்த விலையில் வெங்காயம்
அதுமட்டுமன்றி நுகர்வோருக்கும் குறைந்த விலையில் வெங்காயத்தை கொள்வனவு செய்ய வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
