கருப்பையில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ; வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களால் விபரீதம்

Editor
0

கர்ப்பிணித் தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண தெரிவித்துள்ளார்.


பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த கிரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, நினைவாற்றல் இழப்பு மற்றும் குழந்தையின் நடைப்பயிற்சியில் சிரமங்கள் ஏற்படுதல் போன்ற பல செயல்பாடுகளை பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடலுக்கு தீங்கு

அத்துடன், கிரீம்களில் அதிக அளவு பாதரசம் இருப்பதால் தோல் வெண்மையாக மாறுகின்றது. இந்த பாதரசம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருள் என்று நிபுணர் தெரிவித்தார்.

பெண்களின் கர்ப்ப காலத்தில் இரத்த ஓட்டம் மிக வேகமாக இருப்பதால், கிரீம்களில் உள்ள பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்கள் தோலில் உறிஞ்சப்படுவது விரைவாக நிகழ்கிறது.

இதனால், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களில் அதிக அளவு பாதரசம் இருப்பதால், அந்த கிரீம்கள் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்ய சமர்ப்பிக்கப்படுவதில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top