காதலனுடன் இணைய காத்திருந்த பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பதி! சினிமாவை மிஞ்சிய திகில்

Editor
0

 பிரிந்து சென்ற காதலனை சேர்த்து வைப்பதாக கூறி பெண்ணொருவரை ஏமாற்றி பணம் பெற்ற தம்பதி ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருணாகல், இப்பாகமுவ பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றை சேர்ந்த 32 மற்றும் 25 வயதான இளம் தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

59 வயதான பெண்ணொருவர் சுமார் 1.1 மில்லியன் ரூபா பணம் மற்றும் நகைகளை மோசடியாளர்களிடம் கொடுத்து ஏமாந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காதல் உறவு

வெளிநாடொன்றில் இளைஞனுடன் ஏற்பட்ட காதல் உறவு இலங்கை வந்த பின்னர் முறிவடைந்துள்ளதால் பெண் ஒருவர் கவலையில் ஆழ்ந்துள்ளார்.

தனது காதலனுடன் மீண்டும் சேர்ந்து கொள்ளும் நோக்கில் மந்திரீகம் மூலம் முயற்சி செய்த நிலையில், இந்த தம்பதியை கண்டுபிடித்துள்ளார்.

குறித்த மோசடி தம்பதி, பாதிக்கப்பட்ட பெண்ணின் தீய சக்தி நுழைந்தமையினால் காதலன் விட்டுச் சென்றதாகவும், அதனை நிவர்த்தி செய்ய 2.6 மில்லியன் ரூபா தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் சந்தேக நபர்கள் அந்தப் பெண்ணிடமிருந்து சுமார் 1.1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும், அதற்காக கொடுக்க வேண்டும் என்று கூறி எடுத்துச் சென்றுள்ளனர்.


மோசடி கும்பல்

சந்தேகத்திற்குரிய தம்பதியினர் சம்பந்தப்பட்ட நோக்கத்திற்காகக் கொடுக்க வேண்டிய மீதமுள்ள பணத்தைப் பெற வந்த பெண் மீது சந்தேகம் கொண்ட அந்தப் பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த மோசடி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண்ணிடம் பல ரசீதுகள் மற்றும் பணத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மாரவில நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top