இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்!

Editor
0

 செப்டம்பர் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மொத்தம் 126,379 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தரவுகள் தெரிவிக்கின்றன.


இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் இருந்து மொத்தம் 37,179 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், இது 29.4% ஆகும்.




சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,937 பேரும், ஜேர்மனியிலிருந்து 7,799 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 7,049 பேரும், சீன நாட்டிலிருந்து 7,226 பேரும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.


இந்நிலையில்,செப்டம்பர் மாதத்திற்கான சமீபத்திய புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,692,902 ஆக அதிகரித்துள்ளது.


அவர்களில், இந்தியாவிலிருந்து 362,774 பேர், இங்கிலாந்திலிருந்து 160,078 பேர் மற்றும் ரஷ்யாவிலிருந்து 121,452 பேர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top