நிறுவன ஊழியர்களுக்குள் அடிதடி; பெண் உயிரிழப்பு

Editor
0

  நிறுவனத்தில் இருவருக்கு இடைஇயில் ஏற்பட்ட தகராறில் தாக்குதலில் படுகாயமடைந்து முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


வெலிக்கடை பொலிஸ் பிரிவின் அங்கொடை பகுதியில் நேற்று (26) மாலை இச்சம்பவம் நிகழ்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரே நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளர்கள்

உயிரிழந்தவர் அங்கொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணாவார். சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் அயல் வீட்டுக்காரர் எனவும், உயிரிழந்த பெண்ணும் சந்தேக நபரும் ஒரே நிறுவனத்தில் துப்புரவுப் பணியாளர்களாகப் பணியாற்றி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

தகராறு ஒன்றைத் தொடர்ந்து சந்தேக நபர் குறித்த பெண்ணை ஆயுதம் ஒன்றால் தாக்கியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல் முல்லேரியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெலிக்கடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top