ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) படுகொலை செய்வத்கான திட்டம் நடந்து வருவதாக இலங்கை காவல்துறையினரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பின் உறுப்பினரும் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியுமான அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பாதுகாப்பு நடவடிக்கைகள்
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அல்லது பாதுகாப்பு பிரிவின் உறுப்பினராக மாறுவேடமிட்ட ஒரு கொலையாளி மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக ஜனாதிபதியின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தத் தகவல் மிகவும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து பெறப்பட்டதாகவும், அதைப் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)