யாழ்ப்பணம் (Jaffna) - தையிட்டி விகாரை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள், கலை கலாசாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி (Hiniduma Sunil Senevi) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (26.09.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “வலி வடக்கு காணிகள் கையகப்படுத்துவதாக பல தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன்.
விகாரை பதிவு செய்யப்படவில்லை
நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் தலையீட்டின் ஊடாக தையிட்டி விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தையிட்டி பிரதேசத்தில் உள்ள திஸ்ஸ விகாரை பதிவு செய்யப்படவில்லை. இந்த விகாரையின் காணி தொடர்பான விடயங்கள் ஆராயப்படுகிறன.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இடம்பெற்று வருகின்றன.
இந்த பகுதியில் இடம்பெறும் போராட்டங்கள் குறித்து அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை“ என அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார்
.jpg)