அரசாங்கத்தின் நடவடிக்கையால் அச்சத்தில் எதிர்க்கட்சியினர்!

Editor
0

 தேசிய மக்கள் சக்தி அரசின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையால் எதிர்க்கட்சிகளுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 


இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,


சில ஒன்றிணைவுகள் அச்சம் காரணமாகவே ஏற்படுகின்றன. பாதாளக் குழு உறுப்பினர் கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட மூவரை இந்தோனேசியாவில் வைத்து நாங்கள் கைது செய்தபோது, அவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கவில்லை.


எதிர்க்கட்சிகளுக்கும் அச்சம்

மாறாக, கைது பயத்தில் 'பெக்கோ சமன்' என்பவரின் வீட்டுக்குச் சென்று ஒளிந்திருந்தனர். இதனால் அனைவரையும் கூண்டோடு கைது செய்வதற்கு பொலிஸாரால் முடிந்தது.



அவர்களுக்கு ஏற்பட்ட அச்சம்தான் அனைவரையும் ஒரே இடத்தில் ஒன்றுகூட வைத்தது. அவ்வாறுதான் எதிர்க்கட்சிகளுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது.


அந்த அச்சத்தால்தான் எதிர்க்கட்சியினர் ஓரணியில் இணைந்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு ஒடுக்க வேண்டிய நோக்கமும் - தேவையும் எமக்கில்லை. ஆனால், எத்தனை தரப்புகள் ஒன்றாக இணைந்தாலும், சட்டம் நடைமுறையாகியே தீரும்  என தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top