அரசின் அதிரடி அறிவிப்பு : மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து

Editor
0

 இலங்கை மின்சார சபையின் (CEB) அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மறு அறிவித்தல் வரை அவர்களது விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பொது முகாமையாளர் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த 21ஆம் திகதி வெளியிடப்பட்டது.

வெளியிடப்பட்ட வர்த்தமானி 

1979 ஆம் ஆண்டு 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 2 ஆம் உறுப்புரிமையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) கையெழுத்திடப்பட்டு இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.


சாதாரண பொது வாழ்க்கையைப் பேணுவதற்கு அவசியமானவை மற்றும் அத்தகைய சேவைகளுக்கு இடையூறு அல்லது தடை ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top