யாழில் சிறிய ரக லொறியில் சிக்கிய பல இலட்சம் பெறுமதியான பொருட்கள்!

Editor
0

 கொடிகாமம் பகுதியில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கைதடி பகுதியில் நேற்று (20) வீதி சோதனை நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபடுள்ளனர்.




அனுமதிப் பத்திரம்

இதன்போது அங்கு பயணித்த சிறிய ரக லொறி ஒன்றை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.


​மரக்குற்றிகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப் பத்திரத்தை சந்தேகநபர் தம்வசம் வைத்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


இதனையடுத்து சிறிய ரக லொறியை பொலிஸ் நிலையத்திற்கு சோதனையிட்ட போது, பல இலட்சம் மரக்குற்றிகளை சட்டவிரோதமாக கடத்த முற்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top