உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு Bye Bye கூறினார் மகிந்த ராஜபக்!!

Editor
0

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜயராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து சற்றுமுன்னர் வௌியேறியுள்ளார்.

ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.




அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டிய நிலை

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று (10) நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு அமைய அந்தச் சலுகையை அவர்கள் மூவரும் இழந்துள்ளனர். அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறினார்.    

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top