TVK தலைவர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர கொடுத்துள்ள பதிலடி..!!

Author
0

 கச்சத்தீவை மக்களுக்காகப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன் என்றும், எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன் என்றும் ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் கூறுகிறார். 




யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.


கண்டனங்கள்  

கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்டுக் கொடுத்துக்குமாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இறுதியாக மதுரையில் நடந்த மாநாட்டில் உரையாற்றும் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.



இதனையடுத்து, இந்த விடயம் இலங்கை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக மாறியிருந்தது.


விஜயின் இந்த உரைக்கு இலங்கையிலிருந்து அரசியல் தலைவர்களும் சமூக ஊடக பயனர்களும் தமது கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் முகமாக உரையாற்றியுள்ள ஜனாதிபதி அநுர, கச்சத்தீவை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top