அனிருத் ரவிச்சந்திரன்
தென்னிந்தியாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் பிரபல இசையமைப்பாளராக திகழ்ந்து வருபவர் தான் அனிருத் ரவிச்சந்திரன். பிஸியாக வேலை செய்து வரும் அனிருத், தற்போது ஜெயிலர் 2 படம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
35வது பிறந்தநாளை எட்டியுள்ள அனிருத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் அனிரூத், விளம்பரங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களுக்கும் பாடி சம்பாதித்து வருகிறார்.