வெளிநாட்டில் தடுத்துவைப்பட்ட 6 இலங்கையர்கள் நாடு திரும்பினர்; உறவினர்கள் ஆனந்த கண்ணீர்!!

Editor
0

 எரித்திரியா நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை கடலோடிகள், நேற்றைய தினம் (24) தாயகம் திரும்பியுள்ளனர்.

மர்மமான முறையில் எரித்திரியா நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த 6 பேரும், பல மாத கால இழுபறிக்குப் பிறகு, அரசாங்கத்தின் தீவிர இராஜதந்திர முயற்சிகள் மற்றும் உரிய அதிகாரிகளின் கடுமையான உழைப்பின் பலனாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்

.உறவினர்கள் ஆனந்த கண்ணீர்  




கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்த கடலோடிகளை, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

எரித்திரிய கடற்பரப்பில் அத்துமீறியதாகக் கூறி இவர்கள் கைது செய்யப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் அவர்கள் தற்போது தாயகம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top