நகை அடகு வைக்கும் நிறுவனங்களில் குவியும் பெருந்தொகை மக்கள்!

Editor
0

தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்கள், அதனை புதுப்பித்து மேலதிக பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நிதி நிறுவனங்களை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தங்கத்தின் விலை அதிகரிப்புடன், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் நகைகளை அடகு வைப்பதற்கு கிடைக்கும் கட்டணமும் அதிகரித்துள்ளது.


24 கரட் தங்கத்தை அடகு வைப்பதற்கான முன்பணம் 250,000 முதல் 260,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 22 காரட் தங்கத்தை அடகு வைப்பதற்கு செலுத்தப்பட்ட தொகை 220,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.


தங்க நகை

சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு, 24 கரட் தங்கத்தை அடகு வைப்பதற்கு சுமார் 210,000 ரூபாய் வழங்கப்பட்டது. 22 காரட் தங்கத்தை அடகு வைப்பதற்கு செலுத்தப்பட்ட தொகை 220,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.





அடகு வைப்பதற்கான முன்பணம் அதிகரித்ததால், சில வாடிக்கையாளர்கள் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் தற்போது அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளுக்கு அதிக விலை பெற தங்கள் அடமானங்களை புதுப்பித்துள்ளதாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பால், கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 400,000 ரூபாயைத் தாண்டியது, ஆனால் நேற்று முன்தினம் 390,000 ரூபாயாகக் குறைந்துள்ளது.


தங்கத்தின் விலை அதிகரிப்பால், உள்ளூர் நகைச் சந்தையில் தங்கத்திற்கான தேவை சுமார் 60 சதவீதம் குறைந்துள்ளது. இதன் காரணமாக நகைக்கடைகளில் பணியாற்றுவோர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top