பெண்ணொருவரிடம் தவறாக நடக்க முயற்சித்த சந்தேகநபருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

Editor
0

 வீடொன்றுக்குள் நள்ளிரவு வேளையில் புகுந்து பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொள்ள முற்பட்ட குற்றச்சாட்டில் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது

அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பாதிக்கப்பட்ட பெண், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் நேற்றுமுன் தினம் நள்ளிரவு மணியளவில் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

கடந்த மாதம் 27ஆம் திகதியன்று நள்ளிரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து குறித்த பெண்ணின் உறவினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்றில் முன்னிலை

பொலிஸாரின் நடவடிக்கைக்குள் சிக்காமல் குறித்த சந்தேகநபர் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று முன் தினம் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்க கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் எடுக்கப்பட்ட துரித நடவடிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு நேற்று (15) ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிஸாரால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top