தமிழர் பகுதியொன்றில் பொலிஸாரை மிரள விட்ட பெண் ; போதை பொருள் விற்பனை ஸ்தலமாக மாறிய வீடு!

Editor
0

ஏறாவூர் பிரதேசத்தில் போதை பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டு வந்த வீடு ஒன்றை நேற்று (26) முற்றுகையிட்ட பொலிசார் பெண் வியாபாரி ஒருவரை 5350 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,


நீண்டகாலமாக போதை வியாபாரம்

மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் நேற்று (26) குறித்த பிரதேசத்திலுள்ள ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள  வீதியில் உள்ள போதை பொருள் விற்பனை செய்து வந்த வீட்டை பொலிசார் முறையிட்டனர்.

இதன் போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 56 வயதுடைய பெண் வியாபாரியை 5350 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.

   இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் நீண்டகாலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாவும் திங்கட்கிழமை (27) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top