அநுர - விஜேபாலவை கொலை செய்ய திட்டம் : பிரித்தானியாவில் இருந்து கசிந்த தகவல்

Editor
0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரை தற்கொலை தாக்குதல் அல்லது ஸ்னைப்பர் தாக்குதல்களில் கொலை செய்யக் கூடிய சந்தர்ப்பங்கள் இன்றும் நிலவுவதாக இலங்கை பொலிஸ் துறையை அரசியலிலிருந்து விடுவிக்கும் சர்வதேச அமைப்பின் தலைவர் அஜித் தர்மபால மீண்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பிலான இரகசிய விசாரணைகள் நடைபெறுவதாகவும் விசாரணைகளை நடத்தும் அதிகாரிகளுடன் தான் நேரடி தொடர்பில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இணையத்தம் ஒன்றுக்கு பிரித்தானியாவில் இருந்து வழங்கிய கலந்துரையாடலிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இன்னும் ஒரு வருடத்தில் இலங்கை சமூகம்

குறித்த விசாரணை தகவல்களை பொது வெளிக்கு தெரியப்படுத்த முடியாதுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயயக்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளதோடு அன்புக்கும் ஆளாகியுள்ளனர்.


ஆனால் போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் அதில் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளின் பெரும் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளனர்.

நேரடியாக குறிப்பிட முடியாவிட்டாலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நுற்றுக்கு நுறு வீதம் ஆபத்து நெருங்கிவிட்டது.அவரை படுகொலை செய்வதே அவர்களின் நோக்கமாகும்.

இன்னும் ஒரு வருடத்தில் இலங்கை சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகப்போகிறது. அதை விரும்பாத சக்திகள் இவர்களை முடித்து விடவே சிந்திப்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top