புதிய வாகன எண் தகடுகள் தொடர்பில் வெளியான தகவல்!

Editor
0

 புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு புதிய எண் தகடுகள் வழங்குவதற்கான உறுதியான திகதியை குறிப்பிட முடியாது என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் திணைக்களம் தெரிவித்துள்ளது.


குறித்த விடயத்தை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.


எனினும், கொள்முதல் செயல்முறை தொடர்பான மேல்முறையீடு முடிந்ததும் எண் தகடுகள் வழங்கல் விரைவில் தொடங்கும் என்று அவர் எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.


காவல்துறையினருக்கான அறிவிப்பு

இந்த சூழ்நிலையில் நுகர்வோரை சிரமப்படுத்த முடியாது என்பதால், எண் தகடுகளுக்குப் பதிலாக ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பிற முறைகள் மூலம் எண்களைக் காண்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.




இதன்படி, காவல்துறையினருக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top