வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை.. பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு!!

Editor
0

 வெலிகம பிரதேச சபைத் தலைவர் படுகொலை தொடர்பாக தகவலறிந்த எவரும் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் வூட்லர் தெரிவித்துள்ளார்.


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இன்றையதினம் (22.10.2025) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.



அவர் மேலும் கூறுகையில்,

“வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை தொடர்பில் விசாரணை நடத்த நான்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

விசாரணை

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், கைத்துப்பாக்கியை பயன்படுத்தி நான்கு குண்டுகளை சுட்டு இந்த கொலையை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.



இது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான நீதி விரைவில் பெற்றுக்கொடுக்கப்படும். குறித்த படுகொலை அரசியல் காரணத்திற்காக நடந்ததா அல்லது தனிநபர் காரணத்திற்காக நடந்ததா என்பது விசாரணையை பாதிக்காது.

இது தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் எவரும் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top