வவுணதீவில் போலி அனுமதி பத்திரம் தயாரித்து மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(17) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் சோதனை பிரிவுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ தினமான நேற்று பகல் கொழும்பில் இருந்து வந்த சோதனை பிரிவினர் வவுணதீவு பிரதேசத்தில் வீதியால் மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரத்தை நிறுத்தி அனுமதிப்பத்திரத்தை சோதனை செய்தனர்
.கைது
இதன் போது பேனாவினால் நிரப்பபட்ட அந்த அனுமதி விண்ணப்ப படிவத்திற்கு அருகில் தீயை காட்டி சோதனை செய்த போது அது அழியும் மையினால் கொண்ட பேனாவால் நிரப்பப்பட்டு ஒரு உழவு இயந்திரத்திற்கு 6 போலி அனுமதி பத்திரத்தை போலியாக பூர்த்தி செய்து சட்டவிரோதமாக மண் அகழ்ந்து அதனை கடத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.அதேவேளை வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தை நிறுத்தி சோதனை செய்தபோது போலியாக தயாரித்த அனுமதிப்பத்திரம் என கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவரையும் கைது செய்தனர்.
மேலதிக விசாரணை