இன்று பதவியேற்கவுள்ள புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள்!!

Editor
0

 அநுர அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் (DGI) அறிவித்துள்ளது.


இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) முன்னிலையில் அவர்கள் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் திறம்படச் செய்யவும் அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய அமைச்சரவை

இந்தநிலையில் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர்.



இதேவேளை கடந்த வருடம் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் 18ஆம் திகதி தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top