எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பல் இழப்பீட்டு விவகாரம்: ஜனாதிபதிக்கு சென்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு!!

Editor
0

 எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பல் இழப்பீட்டு விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க இரண்டு வாரங்களுக்கு முன் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.


இந்த நிலையில், அடுத்த நடவடிக்கைக்கான அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்காக, அவர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, ஒரு பில்லியன் டொலர்களை நட்டயீடாக செலுத்த கப்பல் நிறுவனம் மறுப்பை வெளியிட்டிருந்தது


இதனையடுத்தே, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்க முன் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்

.மீண்டும் வழக்கு விசாரணை


இதேவேளை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பல் இழப்பீட்டு ஆணைக்குழுவுக்கு இன்னமும் நீதிமன்றப் பதிவகத்திடம் இருந்து உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கப்பெறவில்லை என ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் காமினி அமரசேகர தெரிவித்துள்ளார்.இதனால் ஆணைக்குழுவின் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு வருடத்திற்குள் செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top