கரூர் சம்பவம்; தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனம் பறிமுதல்?

Editor
0

 தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார பேருந்தை Hit and Run வழக்கில் பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய் தலைமையில் கரூரில், செப்டம்பர் 27 ஆம் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.




பொது நிகழ்வுகளை நடத்தவும் நீதிமன்றம் தடை 

விஜயை காண குவிந்த மக்கள் வெள்ளத்தில், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகளே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


அசம்பாவைதன் தொடர்பில் விசாரிக்க, வடக்கு மண்டல காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் அமைத்தது.


இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்குமாறு கரூர் பொலிஸார் நீதிமன்றம் உத்தரவிட்டது.


மேலும், நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் வகுக்கப்படும் வரை, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் அரசியல் பேரணிகள், வாகனப் பேரணிகள் மற்றும் அதுபோன்ற பொது நிகழ்வுகளை நடத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் உறுதி  செய்யப்படும் வரை, ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் எந்தக் கூட்டங்களுக்கும் அனுமதிக்கப்படாது என்று அரசும் நீதிமன்றத்தில் உறுதியளித்தது.


இந்த நிலையில், விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக விஜய்யின் பிரச்சார பேருந்தை Hit and Run வழக்கில் பறிமுதல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


பிரச்சார பேருந்தை பறிமுதல் செய்து, அதில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகின்றது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top