எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்! வெளியான வர்த்தமானி

Editor
0

 எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பொருட்கள் கொள்வனவின்போது பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுத்து, வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொலித்தீன் பைகளின் விலை 

குறித்த பொலித்தீன் பைகளுக்கு அறவிடப்படும் தொகை நுகர்வோருக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட வேண்டுமென அந்த வர்த்தமானியில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொலித்தீன் பைகளின் விலை விற்பனை நிலையங்களில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருட்கள் கொள்வனவின் போது, பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்குவதைத் தடுக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக, சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளினால் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தப்பட்டது.


பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதன் காரணமாக அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டத்தினை நடைமுறைப்படுத்த உதவுமாறுக்கோரி சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த விடயம் அறியப்படுத்தப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top