சில மாதங்களுக்கு முன்பு திருமணமான இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!!

Editor
0

 புத்தளத்தில் திறக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள் அறையை அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த துயர சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் புத்தளம் நகரைச் சேர்ந்த 24 வயதான தண்டநாராயண நவோத் கிம்ஹான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


​​அலங்காரத்திற்காக  கட்டப்பட்ட பலூன்

புத்தளம் திலாடிய பகுதியில் மோட்டார் சைக்கிள் அறையை திறப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.



இதன்போது, ​​அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் பலூன் வேறொரு இடத்தில் அமைந்துள்ள மின்சார கம்பியில் விழுந்ததில் இளைஞர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.சம்பவத்தை அடுத்து உடனடியாக இளைஞன் புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்த இளைஞன் ஒரு சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தவர் என கூறப்படும் நிலையில் , இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top