யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஆனந்தனின் மாமா : சிக்கப்போகும் மேலும் பலர்!!

Editor
0

 இன்று நாட்டில் அதிகம் பேசப்படும் விடயம் இஷாரா செவ்வந்தியினுடைய கைதும் அவர் யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவிற்கு எப்படி தப்பிச் சென்றார் என்பதுவுமே.

இந்த நிலையில் கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் கைது செய்யப்பட்டார்.



மேலும் சிலர் கைதாகும்வாய்ப்பு

தற்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து ஆனந்தனின் மாமா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.தொடரும் விசாரணைகளில் இன்னும் சிலர் யாழ்ப்பாணத்தில் கைதாகும் சந்தர்ப்பம் உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தனஇதேவேளை இஷாரா செவ்வந்தியை இந்தியாவிற்கு கொண்டு சேர்ப்பித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகின் இயந்திரத்தை காணவில்லை என்றும், குறித்த படகை ஓட்டிச் சென்ற இரு இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top