கெஹெல்பத்தர பத்மே இஷாராவுக்கு வழங்கிய வாக்குறுதி: விசாரணைகளில் அம்பலமாகும் உண்மைகள்!!

Editor
0

கெஹெல்பத்தர பத்மே ஐரோப்பிய நாடொன்றிற்கு அனுப்புவதாக வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையிலேயே இஷாரா செவ்வந்தி, பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்லும் திட்டத்தின் பின்னணியில் செயல்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


சஞ்சீவ கொலைக்கு இஷாரா எந்தப் பணத்தையும் பெறவில்லை எனவும் ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்வதே இஷாராவின் ஒரே கனவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஷாரா செவ்வந்திக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, ஜே.கே. பாய் என்ற நபருக்கு பத்மே 65 இலட்சம் ரூபாயை வழங்கி, போலி கடவுச்சீட்டுக்களை தயாரித்து இஷாராவை ஐரோப்பாவிற்கு அனுப்ப திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது

.இஷாராவின் ஆதரவு 

சஞ்சீவ கொலைக்கு பத்மேவிடம் இருந்து எந்தப் பணத்தையும் பெறவில்லை எனவும், நேபாளத்தில் தங்கியிருக்க அவர் மாதாந்தம் தனக்கு பணம் அனுப்பியதாகவும் இஷாராவிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிவித்துள்ளார்தனது சிறு வயதிலிருந்தே கெஹெல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டிருந்ததாக இஷாரா வெளிப்படுத்தியுள்ளார்.

 





தனது கனவை நனவாக்குவதாக உறுதியளித்த பின்னர், சஞ்சீவ கொலைத் திட்டத்திற்கு பத்மே இஷாராவின் ஆதரவைப் பெற்றுள்ளார்.


இஷாரா செவ்வந்தி உட்பட நேபாளத்தில் கைது செய்யப்பட்ட 6 பேரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top