ஹோட்டல் அறையில் இருந்த பணம் மாயம் ; வெளிநாட்டு பெண் அதிர்ச்சி!

Editor
0

 சிகீரியாவில் ஹோட்டல் அறையில் இருந்து 950 அமெரிக்க டொலர்கள் மற்றும் 10,000 ரூபாய் பணத்தை திருடிய ஹோட்டல் ஊழியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


சிகீரியா ஹோட்டலில் பணிபுரியும் 21 வயதான ஊழியரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.




42 வயது நேபாள பெண் ஒருவர் சிகீரியா பொலிஸிலாரிடம் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


ஹோட்டல் ஊழியரான இளைஞன் வெளிநாட்டு பயணி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து பணத்தை திருடியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


திருடப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு 295,000 ரூபாயாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top