கொழும்பில் இருந்து சென்றகார் விபத்து; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்!

Editor
0

 களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து இன்று (14) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.


கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் குருக்கள்மடம் முருகன் ஆயத்திற்கு முன்னால் விபத்துக்குள்ளகியுள்ளது.




வீதியை விட்டு விலகியதால் விபத்து

காரில் மூன்றுபேர் பயணித்துள்ள நிலையில் அவர்கள் காயங்களுக்குள்ளாகி கலுவாஞ்சி குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்து சம்பவத்தில் உயர் சேதம் ஏற்படாமல் தெய்வாதினமாக உயிர் தப்பியுள்ளனர்.




வேகக்கட்டுப்பாட்டை இழந்து , வீதியை விட்டு விலகியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும்,மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் பகுதியில் அதிகளவான வளைவுகள் காணப்படுவதாகவும், மிக அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மேலும், இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top